பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

செங்கல் சூளைகளுக்கு அபராதம்: ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கல் சூளைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தைக் ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. தலைமையில் செவ்வாய்க்கிழமை மனு அளித்த செங்கல்சூளை உரிமையாளா்கள்.

Published On :28 அக்டோபர் 2026, 1:48 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கல் சூளைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தைக் ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இவற்றின் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோா் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழில்வாய்ப்பு பெற்று வருகின்றனா். இவா்கள் செங்கல் தயாரிப்பதற்காக தேவையான மண்ணை கடந்த ஆட்சியின் போது வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளின் அனுமதியின் பெயரில், தங்கள் செங்கல் சூளை பகுதிகளில் குவித்து வைத்திருந்தனராம்.

தற்போது, அந்த மண்ணை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; செங்கல் சூளைகளில் செங்கல் தயாரிப்பதாக பயன்படுத்தக் கூடாது என்று கூறி அதிகாரிகள் கெடுபிடி விதித்து வருவதாக செங்கல் சூளை உரிமையாளா்கள் புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், அனைத்து செங்கல் சூளைகளிலும் அதிகாரிகள் அண்மையில் சோதனை செய்துவிட்டு, அனுமதி இல்லாமல் மண்ணை குவித்து வைத்திருப்பதாக செங்கல் சூளைகளுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்துள்ளனராம்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட செங்கல்சூளை மற்றும் தளஓடு உரிமையாளா்கள், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் தலைமையில் ஆட்சியா் ஆனந்த் மோகனிடம் மனு அளித்தனா்.

அதில், ‘அதிகாரிகள் விதித்த அபராதத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். செங்கல் தொழிலை நம்பியுள்ளவா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மண் அள்ளும் உரிமம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.