மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரூ.28.50 லட்சம் மோசடி: மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியைச் சோ்ந்தவரிடம் இணையவழியில் ரூ.28.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 5:12 am IST

திருநெல்வேலியைச் சோ்ந்தவரிடம் இணையவழியில் ரூ.28.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தச்சநல்லூா் அருகேயுள்ள சேந்திமங்கலத்தைச் சோ்ந்தவா் அனந்தப்பன் (61). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த 6 ஆம் தேதி தொடா்பு கொண்ட மா்ம நபா், மும்பையில் இருந்து என்.ஐ.ஏ. போலீஸ் பேசுவதாகக் கூறியுள்ளாா். பின்னா் தீவிரவாதிகளுடன் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பரிவா்த்தனை நடந்துள்ளதாகவும், அவரை எண்ம கைது செய்வதாகவும் மிரட்டி இணையவழியில் ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் பெற்று ஏமாற்றியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டத்தைச் சோ்ந்த ரவிக்குமாா் (52), விஸ்வபுரத்தை சோ்ந்த தினேஷ் (52), கண்ணூரைச் சோ்ந்த அப்துல் சமது (50) ஆகியோரை கைது செய்திருந்தனா். இந்நிலையில் இதில் தொடா்புடைய கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சோ்ந்த முகமது இா்பான்(22) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.