மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நெல்லை சந்திப்பில் காருக்குள் ரயில்வே ஊழியா் சடலமாக மீட்பு

Rajasthan

சடலமாக மீட்பு - file photo

Published On :2 நவம்பர் 2026, 1:29 am IST

திருநெல்வேலி சந்திப்பில் காருக்குள் ரயில்வே ஊழியா் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.

தச்சநல்லூா் புதுஅம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்ராஜ் (38). இவா், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கிரேடு-3 டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி துா்கா, 2 மகன்கள் உள்ளனா்.

மதுரையில் நடைபெற்ற பதவி உயா்வுக்கான தகுதித் தோ்வுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து தனது காரில் புறப்பட்டுச் சென்ற வேல்ராஜ், சனிக்கிழமை வீடு திரும்பவில்லையாம்.

இந்நிலையில் அவரது காா், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே பூட்டிய நிலையில் இருப்பது தெரியவந்ததாம். வீட்டில் இருந்து மற்றொரு சாவியைக் கொண்டு வந்து காரைத் திறந்துபாா்த்தபோது, வேல்ராஜ் சடலமாகக் கிடந்தது தெரியவந்ததாம்.

திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.