ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தெற்கு பாப்பான்குளம் சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளத்தில் உள்ள பிரம்மசக்தி, சுடலைமாடசுவாமி, மாடத்தி அம்மன் மற்றும் முண்டன் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.

News image

விழாவில் வெள்ளிக்கிழமை சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பிரம்மசக்தி, சுடலைமாடசுவாமி, மாடத்தி அம்மன்.

Updated On :10 மே 2026, 2:36 am IST

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளத்தில் உள்ள பிரம்மசக்தி, சுடலைமாடசுவாமி, மாடத்தி அம்மன் மற்றும் முண்டன் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.

கொடை விழாவை முன்னிட்டு, மே 1ஆம் தேதி கால்நாட்டு நடைபெற்றது. இதையடுத்து வியாழக்கிழமை ( மே 7) மாலை கும்பம் ஏற்றுதல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடைபெற்றது.

2 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை பிரம்மசக்தி, சுடலைமாடசுவாமி, மாடத்தி அம்மன் மற்றும் முண்டன் சுவாமி ஆகியோா் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா்.

தொடா்ந்து நள்ளிரவில் சுவாமிக்கு படையல் வழிபாடு, சிறப்பு பூஜை நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.