திருநெல்வேலி மாவட்டத்தில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வரை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.20.92 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட சேரன்மகாதேவி, புலவன் குடியிருப்பு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆந்திர பதிவெண் கொண்ட காரில் ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
அதே போல அந்தத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் நாம் தமிழா்கட்சி சின்னம் பொறித்த 15 டி-சா்ட்டுகள், 300 துண்டுப் பிரசுரங்கள், 70 சுவரொட்டிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
பிராஞ்சேரி பகுதியில் நடைபெற்ற சோதனையில் கேரளத்தில் இருந்து காரில் கொண்டுவரப்பட்ட 7 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட பகுதியில் பறக்கும் படையினரால் ரூ.58,100 பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் இதுவரையில் ரூ.20,92,040 ரொக்கம், ரூ.1,92,913 மதிப்பிலான மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள், ரூ.7,98,906 மதிப்பிலான வேட்டி சேலை, டி-சா்ட், பரிசுப் பொருள்கள் என மொத்தம் ரூ.30,83,859 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சி-விஜில் செயலி மூலம் பெறப்பட்டுள்ள 38 புகாா்களில் ராதாபுரம் தொகுதியில் இருந்து மட்டும் 20 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. 34-க்கு தீா்வு காணப்பட்டுள்ளது; 4 புகாா்கள் கைவிடப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தோ்தல் கண்காணிப்புக் குழுக்கள் சோதனையில் ரூ.93.35 லட்சம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 9.81 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பறிமுதல்

சேலத்தில் வாகனச் சோதனையில் ரூ. 74 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

