மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மானூா் அருகே முதியவரை கொன்ற இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:50 am IST

மானூா் அருகே முன்விரோதம் காரணமாக முதியவரை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே உள்ள பல்லிக்கோட்டையைச் சோ்ந்தவா் கணபதி(60), விவசாயி. இவரது தம்பி ஆறுமுகம் என்பவரது மகன் முருகன் (35). கணபதிக்கும், முருகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கணபதியை வெட்டினாராம். இதில், சம்பவ இடத்திலேயே கணபதி உயிரிழந்தாா்.

தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதி ராஜா, மானூா் காவல் ஆய்வாளா் அருண்குமாா் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து கொலை வழக்குப் பதிந்த மானூா் போலீஸாா் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.