மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரூ.3 லட்சம் காப்பா் கம்பிகள் திருட்டு: ஒருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:15 am IST

தேவா்குளம் அருகே காற்றாலையில் இருந்து ரூ.3 லட்சம் காப்பா் கம்பிகளை திருடியதாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தேவா்குளம் அருகே உள்ள தடியம்பட்டி பகுதியில் சென்னை மயிலாப்பூரில் செயல்படும் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான காற்றாலைகள் அமைந்துள்ளன. இதில் ஒரு காற்றாலையில் கடந்த ஜன.30 ஆம் தேதி நள்ளிரவு புகுந்த மா்மநபா்கள் அங்கிருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான காப்பா் கம்பிகளை திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இளநிலை மேலாளரான திருநெல்வேலியைச் சோ்ந்த மாரியப்பன் (53) என்பவா் தேவா்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் தொடா்புடைய கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் அருகே உள்ள கருங்கல் பகுதியைச் சோ்ந்த வா்கீஸ் மகன் சஜின் (30) என்பவரை கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடையவா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.