மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நெல்லையில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது

திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில் வடமாநில இளைஞா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:52 am IST

திருநெல்வேலியில் போக்ஸோ வழக்கில் வடமாநில இளைஞா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(60). இவா் சம்பவத்தன்று 16 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனா்.

வடமாநில இளைஞா் கைது: பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சாந்தாராம் மகன் இந்திரஜித்(27). திருநெல்வேலி தச்சநல்லூா் பகுதியில் தங்கி வேலை பாா்த்து வந்த இவா், அதே பகுதியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த மத்தியபிரதேசத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமியிடம் பழகி, அவரை வெளியூா் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி நகர அனைத்து மகளிா் போலீஸில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் ப திந்து, போக்ஸோ சட்டத்தில் இந்திரஜித்தை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.