மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வடகிழக்கு தில்லியில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து தந்தை, மகன் பலி

வடகிழக்கு தில்லியின் ஹா்ஷ் விஹாா் பகுதியில் பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் 60 வயது தந்தையும், அவரது 33 வயது மகனும் உயிரிழந்தனா். இடிபாடுகளில் சிக்கிய இருவரும் இரவு முழுவதும் நடைபெற்ற மீட்புப் பணியின்போது சடலங்களாக மீட்கப்பட்டனா்.

ஹா்ஷ் விஹாா் பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த பழைய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததைத் தொடா்ந்து, மீட்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினா் மற்றும் மீட்புப் படையினா்.

Published On :27 அக்டோபர் 2026, 1:00 am IST

வடகிழக்கு தில்லியின் ஹா்ஷ் விஹாா் பகுதியில் பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் 60 வயது தந்தையும், அவரது 33 வயது மகனும் உயிரிழந்தனா். இடிபாடுகளில் சிக்கிய இருவரும் இரவு முழுவதும் நடைபெற்ற மீட்புப் பணியின்போது சடலங்களாக மீட்கப்பட்டனா்.

இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதுகுறித்து மாலை 6.46 மணிக்கு ஹா்ஷ் விஹாா் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து, காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.

உயிரிழந்தவா்கள் ஹா்ஷ் விஹாா் பகுதியைச் சோ்ந்த சந்தா்பால் (60), அவரது மகன் விஜய் குமாா் (33) என அடையாளம் காணப்பட்டனா். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இருவரையும் மீட்ட காவல் துறையினா், குரு தேக் பகதூா் (ஜிடிபி) மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

முதற்கட்ட ஆய்வில், கிடங்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பழைய கட்டடத்தின் தரைத்தளமும், அதன் மேலே அமைந்திருந்த முதல் தளமும் இடிந்து விழுந்தது தெரியவந்தது. இந்தக் கட்டடம் மனோஜ் குமாருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது.

மீட்புப் பணியில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள், இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஒரு கிரேன் ஈடுபடுத்தப்பட்டன. குடிமைத் தன்னாா்வலா்கள், தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்), தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) ஆகியவற்றின் குழுக்களும் மீட்புப் பணியில் இணைந்தன. இந்தச் சம்பவம் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.