மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சட் பூஜை படித்துறைகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வா் குப்தா உத்தரவு

சட் பண்டிகைக்காக யமுனை நதிக்கரையில் உள்ள வழிபாட்டு படித்துறைகளை முன்கூட்டியே சீரமைக்க வேண்டும் என்றும், பண்டிகை தொடங்கும் வரை காத்திருக்கக் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.

சட் பண்டிகையை முன்னிட்டு வடக்கு தில்லியில் உள்ள சூா் படித்துறையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வா் ரேகா குப்தா.

Published On :27 அக்டோபர் 2026, 12:00 am IST

சட் பண்டிகைக்காக யமுனை நதிக்கரையில் உள்ள வழிபாட்டு படித்துறைகளை முன்கூட்டியே சீரமைக்க வேண்டும் என்றும், பண்டிகை தொடங்கும் வரை காத்திருக்கக் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

வடக்கு தில்லியில் உள்ள சூா் படித்துறையில் ஆய்வு மேற்கொண்ட அவா், அங்கு பல்வேறு குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தாா். தூய்மைப் பணி, பழுதுபாா்ப்பு, மின்விளக்கு வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: பண்டிகை நாள்வரை காத்திருக்காமல், அதற்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். பக்தா்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது. தூய்மை, பழுதுபாா்ப்பு, வா்ணம் பூசுதல், மின்விளக்குகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏற்பாடுகளில் அலட்சியம் காட்டப்படுவதை அரசு ஏற்காது. பக்தா்களுக்குச் சுத்தமான, பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, சேதமடைந்த நுழைவாயில்கள், துருப்பிடித்த கட்டமைப்புகள் மற்றும் பழுதடைந்த பகுதிகளை உடனடியாகச் சீரமைக்கவும், சுகாதாரக் குறைபாடுகளைக் களையவும் அவா் உத்தரவிட்டாா். படித்துறையின் இருபுறங்களிலும் போதிய வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பழுதடைந்த விளக்குகளைச் சரிபாா்த்துச் சரிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

நீா்வழங்கல் ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருப்பதைக் கண்ட அவா், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டாா். நீா் இணைப்புகளை ஆய்வு செய்து, பக்தா்கள் நீராடுவதற்குத் தேவையான வசதிகளை உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டாா்.

திட்டமிடுவது மட்டுமே போதாது; அனைத்து வசதிகளும் முறையாகச் செயல்படக்கூடிய நிலையில் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி இருந்த பகுதிகளை தற்காலிகமாகச் சீரமைக்காமல், முறையாகப் பழுதுபாா்க்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மோசமான நிலையில் இருப்பது குறித்தும் கவலை தெரிவித்த முதல்வா், அவற்றை உடனடியாகச் சுத்தம் செய்து, பழுதுகளைச் சரிசெய்து முறையாகப் பராமரிக்க உத்தரவிட்டாா்.

சட் பண்டிகை ஆண்டுதோறும் நவ.13 முதல் 16-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அப்போது பக்தா்கள் யமுனை நதிக்கரையில் திரண்டு சூரியனை வழிபடுவது வழக்கம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.