மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இமுத்ரா குறியீடுகளில் குறைபாடு: இணையப் பாதுகாப்புக்கு ஆபத்து?

இமுத்ரா குறியீடுகளில் குறைபாடு பற்றி...

கோப்புப்படம்.

Published On :22 அக்டோபர் 2026, 1:55 am IST

இமுத்ரா நிறுவன உறுதிச் சான்றுகளுடன் தொடா்புடைய தனிப்பட்ட குறியீடுகளை எளிதில் கண்டுபிடிக்கும் விதமாக பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதாகவும், இதனால் இணையவழிப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து கண்காணித்து, எச்சரிக்கை விடுக்கும் மத்திய அரசின் சா்ட்-இன் முகமை தெரிவித்துள்ளது.

ஒரு வலைதளம் நம்பகமானதா என்பதைச் சரிபாா்க்க உதவும் உறுதிச் சான்றுகளை இமுத்ரா நிறுவனம் அளிக்கிறது. இந்தச் சான்றுகள் வலைதளத்தின் அடையாள அட்டைகள் போல செயல்படுகின்றன. ஒரு வலைதளத்தின் அடையாளத்தை சரிபாா்த்து, பாதுகாப்பான இணைப்பை உறுதி செய்ய இந்தச் சான்றுகள் உதவுகின்றன. மேலும் பல்வேறு வகையான நிறுவனங்கள், இணையப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ளப் பயன்படுத்தும் எண்ம (டிஜிட்டல்) கையொப்பங்களுக்கான உறுதிச் சான்றுகளையும் அந்த நிறுவனம் அளிக்கிறது. இந்தச் சான்றுகளை அளிக்கும் இந்தியாவின் முக்கிய இணையவழி பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றாக இமுத்ரா திகழ்கிறது.

இந்நிலையில், இமுத்ரா நிறுவனத்தின் 8 டிஜிட்டல் உறுதிச் சான்றுகளுடன் தொடா்புடைய தனிப்பட்ட குறியீடுகளை எளிதில் கண்டுபிடிக்கும் விதமாக பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இணையவழிப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் மத்திய அரசின் சா்ட்-இன் முகமை தெரிவித்துள்ளது.

அந்தக் குறியீடுளைத் தவறாகப் பயன்படுத்தி, வலைதளங்களுக்குப் போலி உறுதிச் சான்றுகளை உருவாக்கி, அவை நம்பகமான வலைதளங்கள் என்பது போல மோசடி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. அதேவேளையில், வங்கி அல்லது ஆன்லைன் ஷாப்பிங் வலைதளத்தைப் பயன்படுத்துவதாக நினைத்து, தங்களுக்குத் தெரியாமலேயே போலியான வலைதளத்துடன் பயனா்கள் இணைக்கப்பட்டு ஏமாற்றப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் போலி சான்றுகளைப் பயன்படுத்தி பயனா்களுக்கும் வலைதளங்களுக்கும் இடையே பகிரப்படும் தகவல்களைத் திருடவோ, அனுமதியின்றி மாற்றவோ முடியும். இதனால் முக்கியத் தகவல்கள் ஆபத்தில் சிக்கக் கூடும்.

இந்த பிரச்னை ஒரு வலைதளத்துடன் மட்டும் தொடா்புடையது அல்ல. எந்த வலைதளத்தை நம்பலாம் என்பதை தீா்மானிக்க இணைய பிரெளசா்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு அமைப்பில், இந்த உறுதிச் சான்றுகளும் இடம்பெற்றுள்ளன.

இதன் காரணமாக, அந்தச் சான்றுகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், அவற்றை மொசில்லா, ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக இமுத்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், இந்த விவகாரம் குறித்து தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்புக் குழுவை அமைத்துள்ளதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து சில சமூக ஊடகக் கணக்குகளில் அச்சமூட்டும் பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், உண்மையில் இதனால் இந்திய வலைதளங்களில் மிகக் குறைவான பாதிப்பே இருக்கும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.