தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆயுதங்களால் மட்டுமே இனி போர் நடக்காது! பொருளாதாரத் தாக்குதல் மோசமானது: பிரதமர் மோடி

ரிசர்வ் வங்கியின் ரூ.169 கோடி மதிப்பிலான தரவு மற்றும் இணையப் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனத்தை தொடக்கி வைத்து பிரதமர் பேசியது குறித்து...

Prime Minister Modi

பிரதமர் நரேந்திர மோடி - பிடிஐ

Published On :25 அக்டோபர் 2026, 8:27 pm IST

ஆயுதங்களால் மட்டுமே இனி போர்கள் நடக்காது என்றும் ஒரு நாட்டின் மீதான பொருளாதாரத் தாக்குதல் மிக மோசமானது எனவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 25) தெரிவித்தார்.

மத்திய ரிசர்வ் வங்கியின் ரூ.169 கோடி மதிப்பிலான தரவு மையம் மற்றும் இணையப் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 25) திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஞ்சி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

''உலகில் இன்றைய காலகட்டத்தில் ஆயுதங்களால் மட்டுமே போர்கள் நடத்தப்படுவதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரு நாட்டின் பொருளாதாரம் மீதான தாக்குதல்களாலும் அந்நாடு பலவீனமடையக்கூடும்.

இந்தியா பொருளாதார ரீதியாக வலுப்பெற்று வரும் நிலையில், நமது வங்கி அமைப்பை இணையக் குற்றவாளிகள் மற்றும் இணையப் பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதும் சம முக்கியத்துவம் பெறுகிறது.

இணைய அச்சுறுத்தல்கள் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றன. பழைய பயிற்சி முறைகள் அல்லது வழக்கொழிந்த கருவிகளைக் கொண்டு இந்த புதிய சவால்களை நம்மால் சமாளிக்க முடியாது.

நமக்கு நவீன உள்கட்டமைப்பும் திறமையான மனிதவளமும் தேவை. இந்த இடத்தில்தான் புதிய இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒரு முக்கியப் பங்கை வகிக்கும்.

நாம் வங்கி அமைப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், அதன் டிஜிட்டல் உள்கட்டமைப்பையும் பாதுகாக்க வேண்டும். அதனால்தான் நமக்கு வலுவான தரவு மையங்களும் சக்திவாய்ந்த கணினி அமைப்புகளும் தேவைப்படுகின்றன'' எனக் குறிப்பிட்டார்.

Summary

War will no longer be fought with weapons alone Economic attack is important Prime Minister Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.