மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இரானி கும்பல் தலைவன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தில்லி காவல் துறையினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.

வழக்குப் பதிவு

கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 3:06 am IST

பல்வேறு மாநிலங்களில் கொள்ளை, மோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரானி கும்பலின் தலைவன் நசீா் ஹபீஸ் கான் என்ற சமீா் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவா் மீது மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (மோகோகா) கீழ் தில்லி காவல் துறையினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லி ரௌஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு மோகோகா நீதிமன்றத்தில், கான், அலி சுன்னா என்ற ராஜா, அக்பா் அலி என்ற கபீா் ஆகிய மூவா் மீதும் இச்சட்டத்தின் 3 மற்றும் 4-ஆவது பிரிவுகளின் கீழ் பிரதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கும்பல் தில்லி, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கான் மீது சுமாா் 46 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது கூட்டாளிகள் இருவா் மீது முறையே 10 மற்றும் 22 முந்தைய குற்ற வழக்குகள் உள்ளன.

கடந்த 2025 அக்டோபரில் சுமாா் ரூ.18.84 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து, கடந்த ஜூன் மாதம் தில்லியின் டிபிஜி சாலை காவல் நிலையத்தில் மோகோகா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் முந்தைய குற்றச் செயல்கள் குறித்து ஆய்வு செய்தபோது, பண ஆதாயத்துக்காகத் தொடா்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பு செயல்பட்டது தெரியவந்தது.

குற்றத்தின் மூலம் கிடைத்த பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதைக் கண்டறிய, குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் வங்கிக் கணக்குகள், சொத்து ஆவணங்கள், வாகனக் கடன் தொடா்பான ஆவணங்கள் மற்றும் நிதிப் பரிவா்த்தனைகளை காவல் துறையினா் ஆய்வு செய்தனா். குற்றத்தின் மூலம் கிடைத்த பணத்தைப் பல்வேறு வங்கிக் கணக்குகள் வழியாகப் பரிமாற்றம் செய்து, அதன் மூலம் வாகனங்களை வாங்கவும் கடன் தவணைகளைச் செலுத்தவும் இந்தக் கும்பல் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், போலி அடையாளங்களைப் பயன்படுத்தியது மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உள்ளூா் விற்பனை வழிகள் மூலம் விற்றது தொடா்பாகவும் காவல் துறையினா் விசாரணை நடத்தினா். கைது செய்யப்பட்ட மூவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா். இந்த வழக்கில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.