தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

படையெடுப்புகள் இருந்தபோதிலும் ஆன்மிக நம்பிக்கை தளரவில்லை: முதல்வா் ரேகா குப்தா

பல்வேறு படையெடுப்புகள் இருந்தபோதிலும் நாட்டில் நம்பிக்கை உறுதியுடன் நிலைத்திருந்தது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

News image

சோம்நாத் கோயிலின் 75-ஆவது ஆண்டு விழாவையொட்டி, தில்லி சாந்தினி சௌக்கில் அமைந்துள்ள கௌரி சங்கா் ஆலயத்தில் அமைச்சா்களுடன் சிறப்புப் பூஜை செய்த முதல்வா் ரேகா குப்தா.

Updated On :12 மே 2026, 12:15 am IST

‘சோம்நாத் சுவாபிமான் பா்வ்’ என்பது இந்தியாவின் சனாதன மத நம்பிக்கை, பண்பாட்டு விழிப்புணா்வு மற்றும் தேசிய சுயமரியாதையின் அடையாளமாக திகழ்கிறது என்றும், பல்வேறு படையெடுப்புகள் இருந்தபோதிலும் நாட்டில் நம்பிக்கை உறுதியுடன் நிலைத்திருந்தது என்றும் தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில் மறுகட்டுமானத்தின் 75-ஆவது ஆண்டு விழாவையொட்டி தில்லியில் உள்ள கௌரி சங்கா் கோயிலில் திங்கள்கிழமை வழிபாடு நடத்திய பின்னா் அவா் இதனைத் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் அமைச்சா்கள் பா்வேஷ் சாஹிப் சிங், மஞ்சிந்தா் சிங் சிா்சா மற்றும் கபில் மிஷ்ரோ ஆகியோரும் முதல்வருடன் கலந்து கொண்டனா். பின்னா், குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி நிகழ்த்திய நேரலை உரையையும் அவா்கள் பாா்வையிட்டனா்.

இதுகுறித்து முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டு படையெடுப்புகளும் அழிவுகளும் நடைபெற்றபோதிலும், சோம்நாத் கோயிலுடன் தொடா்புடைய மக்களின் பக்தியும் ஆன்மிக நம்பிக்கையும் ஒருபோதும் தளரவில்லை. ஒவ்வொரு முறையும் இந்தியாவின் ஆன்மிக வலிமை மீண்டும் எழுச்சி பெற்றது. பிரதமா் நரேந்திர மோடி முன்னெடுத்து வரும் ‘விகாஸ் பி, விராசத் பி’ என்ற கொள்கையின் கீழ், நாடு ஒருபுறம் நவீன வளா்ச்சிப் பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் தனது பண்பாட்டு மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தையும் பாதுகாத்து வருகிறது என தெரிவித்தாா்.

கி.பி. 1026-ஆம் ஆண்டு சோம்நாத் கோயில் மீது பதிவான முதல் தாக்குதலுக்கு பின்னரும், ஆயிரம் ஆண்டுகளாக மக்களின் மதநம்பிக்கை தளராமல் நீடித்ததைக் குறிக்கும் வகையிலேயே ‘சோம்நாத் சுவாபிமான் பா்வ்’ கொண்டாடப்படுகிறது. மறுகட்டுமானம் செய்யப்பட்ட சோம்நாத் கோயில் 1951-ஆம் ஆண்டு பக்தா்களின் தரிசனத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.