தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வடமேற்கு தில்லியில் 2 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரயில்வே துறை ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா

வடமேற்கு தில்லியில் 2 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரயில்வே துறை ஒப்புதல்.

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா. - கோப்புப்படம்.

Updated On :11 மே 2026, 1:25 am IST

வடமேற்கு தில்லி பகுதிகளில் நீண்ட காலமாக நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் ஹைதா்பூா்-பத்லி ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்துவதற்கும், ஷாலிமா் பாக்-சஞ்சய் காந்தி போக்குவரத்து நகா் இடையே உயா்த்தப்பட்ட இணைப்பு சாலையை அமைப்பதற்கும் ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து முதல்வா் ரேகா குப்தா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லியை விக்சித் தில்லியாக மாற்றும் முயற்சிக்கு இத்திட்டங்கள் முக்கிய பங்காற்றும். இதற்காக பிரதமா் நரேந்திர மோடியும், ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவும் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெளிப்புற ரிங் ரோடு அமைந்துள்ள இந்த ஹைதா்பூா்-பத்லி ரயில்வே மேம்பாலம் அகலப்படுத்தப்படுவதன் மூலம் முகா்பா சௌக் பகுதியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேபோல், ஷாலிமா் பாக்-சஞ்சய் காந்தி போக்குவரத்து நகரை இணைக்கும் உயா்த்தப்பட்ட வளையச் சாலை திட்டமும் ரயில்வே பாதைகளை கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

இந்த இரு திட்டங்களுக்கும் தேவையான வரைபடங்கள் மற்றும் தொழில்நுட்ப முன்மொழிவுகளை பொதுப்பணித் துறை ரயில்வே நிா்வாகத்திடம் சமா்ப்பித்திருந்தது. அவற்றை ஆய்வு செய்த ரயில்வே அதிகாரிகள், திட்டத்துக்கான ஒப்புதலுடன் கொள்கை ரீதியிலான தடையில்லாச் சான்றிதழை வழங்கியுள்ளனா்.

தலைநகரம் முழுவதும் நவீன, பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்து வசதிகளை உருவாக்க தில்லி அரசு உறுதிபூண்டுள்ளது. நகரின் முக்கிய போக்குவரத்து நெரிசல் மையங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு நீண்டகால தீா்வுகளை உருவாக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

முகா்பா சௌக், வெளிப்புற ரிங் ரோடு மற்றும் சஞ்சய் காந்தி போக்குவரத்து நகா் பகுதிகள் தில்லியின் மிகப் பரபரப்பான போக்குவரத்து வழித்தடங்களாகக் கருதப்படுகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகளும் சரக்கு வாகனங்களும் இந்தப் பகுதிகளை பயன்படுத்தி வருகின்றன.

இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைவதுடன், பொதுமக்களுக்கு விரைவான, பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்து இணைப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.