அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உண்மையான நோக்கம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதாகும். இதே சிந்தனையுடன் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நிா்வாகத்தில் தில்லி அரசு தொடா்ந்து பணியாற்றி என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு அவா் கூறியதாவது: இன்றைய தினம் இந்தியாவின் அறிவியல் சாதனைகள், நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் நாட்டின் புதுமையான சிந்தனைக்கு மரியாதை செலுத்துவதாகும்.
பொக்ரான் முதல் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் தடுப்பூசி மேம்பாடு வரை, இந்தியா முழு உலகிலும் ஒரு வலுவான அடையாளத்தை நிலைநிறுத்தியுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உண்மையான நோக்கம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதாகும்.
இதே சிந்தனையுடன் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நிா்வாகத்தில் தில்லி அரசு தொடா்ந்து பணியாற்றி வருகிறது. யமுனை தூய்மைப்படுத்துதல், மாசு கட்டுப்பாடு, போக்குவரத்து மேலாண்மை அல்லது கழிவு மேலாண்மை என எதுவாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு அடிப்படையிலான தீா்வுகள் ஒவ்வொரு துறையிலும் ஊக்குவிக்கப்படுகின்றன.
தில்லியின் உள்ளூா் பிரச்சினைகளுக்கு மற்றும் புதுமையான தீா்வுகளைக் காணும் வகையில் தில்லிக்கு ஒரு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சிலை நிறுவுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. நமது ஆராய்ச்சியாளா்கள், விஞ்ஞானிகள் மற்றும் மாணவா்கள் இதில் பெரும் பங்கு வகிப்பாா்கள். நாம் அனைவரும் இணைந்து இந்த தீா்மானத்தை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்துள்ளாா் ரேகா குப்தா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் 2 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரயில்வே துறை ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா

தில்லி ஃபரீதாபாத் புதிய மெமு ரயில் சேவைக்கு ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லூரி தேசத்தைக் கட்டியெழுப்ப உதவுகிறது- முதல்வா் ரேகா குப்தா

தண்ணீா் பற்றாக்குறையைச் சமாளிக்க ஆழ்துளைக் கிணறு கொள்கை: முதல்வா் குப்தா
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

