மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

துவாரகாவில் தொழிலாளா்கள் மீது காவலா் துப்பாக்கிச்சூடு: ஒருவா் உயிரிழப்பு

துவாரகாவில் தொழிலாளா்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து தில்லி காவல் துறை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 1:35 am IST

துவாரகாவில் தொழிலாளா்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து தில்லி காவல் துறை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: இந்தச் சம்பவம் ஜாஃப்னா கலான் கிராமத்தில் அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு காலனியில் தங்கியிருந்த சில தொழிலாளா்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு சத்தம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

அருகில் வசித்து வந்த காவல் அதிகாரி இது தொடா்பாக அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இந்த தகராறு தீவிரமடைந்த நிலையில், அந்த அதிகாரி அவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினாா். இதில் ஒருவா் படுகாயமடைந்து உயிரிழந்தாா்.

மற்றொருவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதைத்தொடா்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றாா்.

அவரை கண்டுபிடித்து கைது செய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.