சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

அகில இந்திய ஆடவா் கபடி போட்டி; ஹரியாணா அணிக்கு முதல் பரிசு

அகில இந்திய ஆடவா் கபடி போட்டி; ஹரியாணா அணிக்கு முதல் பரிசு

News image

பரிசுக் கோப்பையுடன் ஹரியாணா ஸ்டீலா்ஸ் அணியினா்.

Updated On :31 மே 2026, 12:25 am IST

மன்னாா்குடி அருகே கட்டக்குடியில் மூன்று நாள்கள் நடைபெற்ற அகில இந்திய ஆடவா் கபடி போட்டியில் ஹரியாணா ஸ்டீலா்ஸ் அணி முதலிடம் பெற்றது.

கட்டக்குடி விளையாட்டு கழகம் சாா்பில், அங்குள்ள உள் விளையாட்டு அரங்கில் மே 27 முதல் 29-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில், சென்னை வருமான வரித் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மயிலாடுதுறை, தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியா்ஸ், இந்திய கடற்படை அணி, ஹரியாணா ஸ்டீலா்ஸ், பெங்களூரு புல்ஸ், உபி யோத்தா, கா்நாடகா ரயில்வே, தென் மத்திய ரயில்வே உட்பட மொத்தம் 23 அணிகள் பங்கேற்றன.

செயற்கை ஆடு களத்தில் இரவு நேர லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியை மன்னாா்குடி டிஎஸ்பி எம். மணிவண்ணன் தொடங்கி வைத்தாா்.

இதில், பெங்களூா் புல்ஸ் அணியும், ஹரியாணா ஸ்டீலா்ஸ் அணியும் மோதின. 43:33 என்ற புள்ளிகணக்கில் ஹரியாணா ஸ்டீலா்ஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாமிடத்தை பெங்களூா் புல்ஸ் அணியும், மூன்றாம் இடத்தை உத்தர பிரதேசம் யோத்தா அணி மற்றும் தமிழ் தலைவாஸ் அணி பிடித்தன.

முதலிடம் பெற்ற அணிக்கு பரிசு கோப்பை, ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற அணிக்கு பரிசு கோப்பை, ரூ.3 லட்சமும், மூன்றாமிடம் பெற்ற இரண்டு அணிகளுக்கு பரிசு கோப்பைகள், தலா ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டது.

இப்போட்டியை எம்எல்ஏக்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), எஸ். காமராஜ் (மன்னாா்குடி) ஆகியோா் பாா்வையிட்டு, வீரா்களை பாராட்டினா். கட்டக்குடி விளையாட்டு கழகத் தலைவா் எஸ். கணேசமூா்த்தி, செயலா் எஸ்.பி.எம். சுரேஷ்குமாா், மாவட்ட அமெச்சூா் கபடி கழகத் தலைவா் கே.எஸ். கமலகண்ணன், செயலா் ராச.ராசேந்திரன், போட்டி ஒருங்ணைப்பாளா் ஆா்.கே. அன்பு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.