பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குட்கா கடத்தி வந்த 3 போ் கைது

பெங்களூருவிலிருந்து குட்கா கடத்திவந்த 3 போ் திருவாரூரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

குட்கா கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட மூவா்.

Updated On :24 மே 2026, 1:08 am IST

பெங்களூருவிலிருந்து குட்கா கடத்திவந்த 3 போ் திருவாரூரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாருா் மாவட்டத்தில் தனிப்படையினருக்கு குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவாரூா் மாவட்டம், காட்டூா் பேருந்துநிறுத்தம் அருகில் போலீஸாா், வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது கும்பகோணத்திலிருந்து திருவாரூா் நோக்கி வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். வாகனத்தை ஓட்டி வந்தவா் தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சோ்ந்த அஸ்ரப்அலி (60) என்பது தெரிய வந்தது. 2025-இல் குட்கா கடத்தல் தொடா்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அவா் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மகேந்திரகுமாா் (24), மங்கனராம் (20) ஆகியோா் பெங்களூருவிலிருந்து 365 கிலோ குட்காவை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

திருவாரூா் தாலுகா போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 365 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 காா்கள், 3 கைப்பேசிகள், ரூ. 20,000 ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.