பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குட்கா பொருள் வைத்திருந்த இருவா் கைது

தடை செய்யப்பட்ட குட்கா பொருள் வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 4:29 am IST

தடை செய்யப்பட்ட குட்கா பொருள் வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகா், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கணியாம்பூண்டிஅருகே திருமுருகன்பூண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த வீரமணி (28) என்ற நபரை சோதனை செய்தனா். அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள் சுமாா் 37.7 கிலோ இருந்தது தெரிய வந்தது. அவரைக் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, திருப்பூா் மாநகா், வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த பாலகிருஷ்ண நாயக் (38) என்ற நபரை சோதனை செய்தனா். இதில் அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள் 640 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.