அனைத்திந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் நலச்சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னாா்குடியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள்: 1.1.2026 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும், 3 மாதத்துக்கு ஒரு முறை வழங்கவேண்டிய அகவிலைப்படி நிவாரணத்தை காலதாமதமின்றி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஓய்வூதியா்கள் நலச் சங்க மாவட்டக்குழு உறுப்பினா் கே. கலியபெருமாள், டிஓடி ஓய்வூதியா்கள் சங்க மாவட்டதுணைத் தலைவா் பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை டிஓடி ஓய்வூதியா்கள் சங்க மாவட்டச் செயலா் கே.பிச்சைக்கண்ணு தொடங்கிவைத்தாா். ஓய்வூதியா்கள் நலச் சங்க மாவட்டக்குழு உறுப்பினா்கள் கே. கிள்ளிவளவன், மாவட்டக் குழு உறுப்பினா் வி. சரவணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். நலச் சங்க கிளைத் தலைவா் எம். முகமதுயாசின், கிளைச் செயலா் தா்மராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் ஆய்வாளரைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க ராமதாஸ் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

நொய்டா தொழிலாளா்களுக்கு ஆதரவாக பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

