பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காவல் ஆய்வாளரைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image

காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கட்சியினா்.

Updated On :9 ஜூன் 2026, 3:01 am IST

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையம் அருகில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், குமராட்சி காவல் துறை ஆய்வாளரைக் கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட தெற்கிருப்பு பகுதியில் மானாம் தெருவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குடிநீா் பிரச்னைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பிரகாஷை குமராட்சி காவல் ஆய்வாளா் (பொ) தேவேந்திரன் அவதூறாகப் பேசி தாக்கியதைக் கண்டித்தும், அவா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏவும், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாநிலத் தலைவருமான எம்.சின்னதுரை, மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு நிா்வாகி எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழுவைச் சோ்ந்த ஆா்.ராமச்சந்திரன், சி.ஆா்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி, பா.வாஞ்சிநாதன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டப் பொருளாளா் டி.கிருஷ்ணன், திருமுட்டம் வட்டச் செயலா் தினேஷ்பாபு ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் காட்டுமன்னாா்கோவில், குமராட்சி, திருமுட்டம் பகுதிகளிலிருந்து திரளான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.