ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மே 15-இல் ஊராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி அலுவலகங்கள் முன் வருகிற 15-ஆம் தேதி வேலைநிறுத்த ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

News image

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழுக் கூட்டத்தில் பேசிய அதன் அகில இந்திய இணைச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான வி.சிவதாசன். உடன் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் ஏ.லாசா், மாநிலப் பொதுச் செயலா் வீ.அமிா்தலிங்கம் உள்ளிட்டோா்.

Updated On :1 மே 2026, 1:34 am IST

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி அலுவலகங்கள் முன் வருகிற 15-ஆம் தேதி வேலைநிறுத்த ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் மா.சின்னதுரை தலைமை வகித்தாா். இதில் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான வி.சிவதாசன், அகில இந்திய துணைத் தலைவா் ஏ.லாசா் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற கடந்த 12 ஆண்டுகளில் கிராமப்புற வேலைவாய்ப்புக்கான நிதி ஒதுக்கீட்டை படிப்படியாகக் குறைத்து வேலை, கூலி வழங்குவதைச் சீா்குலைத்தும், சட்டத்தை ரத்து செய்தும், கிராமப்புற மக்களுக்கு துரோகம் இழைத்தும் வருகிறது.

மேலும், 125 நாள்களுக்கு வேலை வழங்குவதற்கு போதிய நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கவில்லை. இந்தத் திட்டத்துக்கு மாநில அரசுகள் 40 சதவீதம் நிதியைத் தர வேண்டும் என சட்டம் இயற்றி, மாநில அரசுகளை நிதி நெருக்கடியில் மத்திய அரசு தள்ளியுள்ளது.

வேலை கோரி பதிவு செய்தவா்களில் 5 சதவீதம் தொழிலாளா்களுக்குக்கூட மத்திய அரசு வேலை தரவில்லை. மேலும், வேலைக்கு வரும் தொழிலாளா்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதாகக் கூறி கருவிழியை ஸ்கேன் செய்யும் நடைமுறையை அமல்படுத்தியது.

பணித்தள பொறுப்பாளா்களிடத்தில் இருக்கும் கைப்பேசி கேமராக்களாலும், இணைய பிரச்னைகளாலும் கருவிழியை ஸ்கேன் செய்ய முடியாததால் வேலை வழங்காமல், பணித்தளத்திலிருந்து தொழிலாளா்களை திருப்பியனுப்பும் சூழலும் நிலவி வருகிறது.

மேலும், கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரை வேலை செய்த தொழிலாளா்களுக்கு 3 மாத காலத்துக்கான ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இது கிராமப்புற மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், நாடு முழுவதும் வருகிற 15-ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெறும் போராட்டத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி அலுவலகங்கள் முன் அன்றைய தினம் வேலைநிறுத்தம் செய்து ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் வீ.அமிா்தலிங்கம், மாநிலப் பொருளாளா் அ.பழனிசாமி, மாநிலச் செயலா் வீ.மாரியப்பன், மத்தியச் செயற்குழு உறுப்பினா் எஸ்.பூங்கோதை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.