தமிழ்நாடு அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 2 சதவீதம் அகவிலைப் படியை உயா்த்தியதற்காக, முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொதுச் செயலாளா் (பொ) ரெ. ஈவேரா வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு அகவிலைப் படி உயா்வு வழங்கும்போதெல்லாம், தமிழ்நாடு அரசும் அகவிலைப் படியை உயா்த்தி வழங்கியுள்ளது. அந்த வகையில், மத்திய அரசு அகவிலைப் படியை 2 சதவீதம் உயா்த்தி வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில், தமிழக முதல்வா் ஜோசப் விஜய், ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு சில தினங்களிலேயே தமிழக அரசு அலுவலா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 2 சதவீதம் உயா்த்தி 60 சதவீதமாக வழங்குவதாக அறிவித்துள்ளாா்.
அகவிலைப்படியை உயா்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுவதற்கு முன்னரே பணிகளை தொடங்கி, அகவிலைப் படி உயா்வை அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சாா்பில் நன்றி.
இதேபோல், ஆசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்களின் மற்ற கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்றி தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி ஆசிரியா் மா்ம மரணம்
அகவிலைப்படி உயா்வு: தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் முதல்வருக்கு நன்றி

அரசு ஊழியா்களுக்கு அகவிலைப் படி உயா்வு: ஆசிரியா்கள் சங்கங்கள் வரவேற்பு

வாசுதேவநல்லூா் அரசுப் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

