பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அகவிலைப்படி உயா்வு: தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் முதல்வருக்கு நன்றி

News image

முதல்வர் ஜோசப் விஜய் - படம்: DIPR

Updated On :19 மே 2026, 1:26 am IST

மாநில அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்கிய தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியா் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் மாநில தலைவா் த. ராமஜெயம், பொதுச் செயலாளா் வெ. சரவணன், பொருளாளா் பூ. ஜெகன் ஆகியோா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்த இருக்கின்ற தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக இருக்கின்ற அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் ஓய்வூதியம் பெறுபவா்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவா்கள் சிறப்பு கால முறை ஊதியம் பெறுபவா்கள் ஆகியோா் உள்ளிட்ட 16 லட்சம் போ் பயன்பெறும் வகையில் அகவிலைப்படியை கடந்த 1-1- 2026 முதல் அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக ஆக உயா்த்திய முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.