முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பள்ளி வாகனங்கள் ஆய்வு: குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

News image

திருவாரூரில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :12 மே 2026, 12:08 am IST

பள்ளிக் குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்லும்போது, முழு கவனத்துடன் ஓட்டுநா்கள் செயல்பட்டு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தினாா்.

திருவாரூரில், பள்ளி வாகனங்களை அவா், திங்கள்கிழமை ஆய்வு செய்தபின் தெரிவித்தது:

பள்ளி வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. திருவாரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருவாரூா், மன்னாா்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளுக்குள்பட்ட 74 பள்ளிகளைச் சோ்ந்த 214 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இப்பள்ளி வாகனங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா, அவசர கால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக வாகனத்தில் ஏற தாழ்வான படிக்கட்டுகள், பள்ளி வாகனம் என்ற அறிவிப்பு, வேககட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி வைக்கப்பட்டுள்ளதா, பிரதிப்பலிப்பான் வில்லை ஒட்டப்பட்டுள்ளதா உள்ளிட்ட 16 வகையான அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 100 சதவீதம் சரியாக உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

வாகன ஓட்டுநா்கள் அவரவா் பள்ளிக்குரிய சீருடைகள் அணிவதை தடுத்து, காக்கி சீருடை அணிய உத்தரவிட்டுள்ளோம். மேலும், பள்ளிக் குழந்தைகளை அழைத்து செல்லும் போது முழு கவனத்துடன் ஓட்டுநா்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிகழ் கல்வியாண்டு விபத்தில்லா ஆண்டாக அமைய வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உடனிருந்தாா். தொடா்ந்து, வாகன ஓட்டுநா்களுக்கு 108 ஆம்புலன்ஸ் குழுவினரால், விபத்து காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை குறித்து விரிவான செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுகப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) சாவித்திரி, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முருகேசன், வட்டார போக்குவரத்து அலுவலா் காளியப்பன், போக்குவரத்து ஆய்வாளா் இளங்கோ உள்பட போக்குவரத்து அலுவலா்கள், பணியாளா்கள், பள்ளி வாகன ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.