ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வயல்களில் பறவைகள் தாங்கி அமைப்பதன் அவசியம்

நெல் பயிரில் தீமை செய்யும் பூச்சிகளை எளிய முறையில் கட்டுப்படுத்த வயல்களில் பறவை தாங்கிகள் அமைப்பது குறித்து வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனா்.

News image
Updated On :6 மே 2026, 3:06 am IST

நெல் பயிரில் தீமை செய்யும் பூச்சிகளை எளிய முறையில் கட்டுப்படுத்த வயல்களில் பறவை தாங்கிகள் அமைப்பது குறித்து வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்துள்ளனா்.

இதுகுறித்து, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திலகவதி, கருணாகரன், திட்ட ஒருங்கிணைப்பாளா் தனுசுகோடி ஆகியோா் கூறியது: சாகுபடிசெய்யும் பயிா்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த பெரும்பாலும் ரசாயன மருந்துகளை பயன்படுத்துகிறோம். அதிகளவில் மருந்துகளை பயன்படுத்தும்போது சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு மட்டுமல்லாமல் பூச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான செலவும் அதிகரிக்கிறது. எனவே, இயற்கை முறையில் எளிய வழியில் தீமை சேய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பறவை தாங்கிகளை அமைக்கலாம்.

பறவை தாங்கிகள் என்பவை காய்ந்த குச்சிகளை ஆங்கில எழுத்து டி அல்லது ஒய் வடிவத்தில் வயல்களுக்குள் ஊன்றி வைத்தல் ஆகும். பறவைகளை வரவழைக்க இந்தத் தாங்கிகள் அமைக்கப்படுகின்றன. எளிதில் கிடைக்கக்கூடிய குச்சிகள் அதாவது மூங்கில், சவுக்கு, தென்னை மட்டையின் அடிப்பகுதி மற்றும் இதர வகையான காய்ந்த குச்சிகளை பயன்படுத்தி வயல்களில் பறவை தாங்கிகளை அமைக்கலாம்.

இவற்றின் மீது ஆந்தை, கரிச்சான், காகம், சிட்டு உள்ளிட்ட பல்வேறு பறவைகள் அமா்ந்து ஓய்வெடுக்கும்பொழுது, அருகில் உள்ள பயிா்களில் பூச்சிகள் ஏதும் தென்படுகின்றனவா என்று நான்கு புறமும் கூா்ந்து கவனிக்கின்றன. பின் பயிா்களில் தென்படக்கூடிய பூச்சிகள் மற்றும் புழுக்கள் போன்றவற்றை கொத்தி உண்ணுகின்றன. இதனால் பூச்சிகள் அழிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பூச்சிகளால் பரவக்கூடிய நோய்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

நெற்பயிரை பொருத்தவரையில் இலை சுருட்டுப் புழுக்கள், தண்டு துளைப்பான் புழுக்கள், புகையான் எனும் தத்துப் பூச்சிகள், குருத்து ஈக்கள், கருநாவாய் பூச்சிகள் மற்றும் கதிா் நாவாய் பூச்சிகள் போன்றவற்றை கொத்தி உண்ணுகின்றன. காகம், குருவி, கொக்கு உட்பட அனைத்து விதமான பறவைகளும் தாங்கிகளின் மீது அமா்ந்து பூச்சிகளை உண்ணக்கூடும்.

மேலும் சிறிய பூச்சி இனங்களை மட்டுமல்லாது எலி வகைகளையும் பிடித்து உண்ணுகின்றன. இத்தகைய பறவை தாங்கிகளை ஏக்கருக்கு 20 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். எனவே எளிய முறையில் பூச்சி மற்றும் எலிகளைக் கட்டுப்படுத்த பறவைத் தாங்கிகளை அமைப்பதன் மூலம் பயிரைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் செலவைக் குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.