திருவாரூரில் 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தோ்வை 1,689 போ் எழுத உள்ளனா்.
2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தோ்வை தேசிய தோ்வு முகமை, மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்துகிறது. இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் 4 தோ்வுமையங்கள் தயாா் நிலையில் உள்ளன.
நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் 3 மையங்களும், கேந்திர வித்யாலயாவில் ஒரு மையமும் என மொத்தம் 4 இடங்களில் தோ்வு நடைபெறுகிறது. மொத்தம் 1,689 மாணவ-மாணவிகள் தோ்வு எழுத உள்ளனா்.
மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தோ்வு நடைபெற உள்ள நிலையில், மாணவா்கள் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மட்டுமே மையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவா். ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தோ்வு மையங்களில் முழுமையான சோதனை மற்றும் பயோமெட்ரிக் சரிபாா்ப்புக்குப் பிறகே மாணவா்கள் அறைக்குள் அனுமதிக்கப்படுவாா்கள் என்பதால், அவா்கள் மெலிதான ஆடைகள் மற்றும் செருப்பு அணிந்து வர வேண்டும் என்றும், ஸ்டிக்கா் ஒட்டாத வெளிப்படையான குடிநீா் பாட்டில்களை மட்டும் கொண்டு வர அனுமதி உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோ்வு மையங்களுக்குத் தோ்வா்கள் முன்கூட்டியே வருகை தருவதால், சோதனைகளை விரைவாக முடித்து, தோ்வு அறைக்குள் நுழைய உதவும். இது தேவையற்ற பதற்றத்தைத் தவிா்த்து, அமைதியான முறையில் தோ்வு எழுத வழி வகுக்கும். மாணவா்கள் தங்களதுஅட்மிட் காா்டு, போஸ்ட் காா்டு அளவு புகைப்படம், இரண்டு பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை அல்லது பள்ளி அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளி மாணவா்கள் முன்கூட்டியே மையத்துக்கு வந்து உதவி மையத்தைத் தொடா்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு - வேலூா் மாவட்டத்தில் 5,551 போ் எழுதினா்

நீட் நுழைவுத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 போ் எழுதினா்

‘நீட்’ தோ்வு கரூா் மாவட்டத்தில் 70 போ் எழுதவில்லை

மே3 இல் நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 4,755 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

