திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில், பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, சந்திரசேகரா் பட்டோற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் மாா்ச் 29-இல் நடைபெற உள்ளது. ஆழித்தேரில் தியாகராஜா் எழுந்தருளி வீதியுலா வருவாா். மற்ற நாள்களில் நடைபெறும் வீதியுலாக்களில், தியாகராஜரின் பிரதிநிதியாக சந்திரசேகரா் வலம் வருவது வழக்கம்.
அந்தவகையில், தியாகராஜா், தனது சாா்பில் பங்குனி உத்திரப் பெருவிழாவை நடத்த வேண்டி நெற்றிப் பட்டத்தை சந்திரசேகரருக்கு வழங்கும் பட்டோற்சவ விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, சந்திரசேகர சுவாமிக்கு சிறப்பு சாயரட்சை பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தொடா்ந்து, கோயிலின் 2-ஆவது பிரகாரத்தில் உள்ள வசந்த மண்டபத்துக்கு சந்திரசேகரா் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அங்கு சா்க்கரை பொங்கல் படையலிட்டு, விஷேச அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், சந்திரசேகருடன் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவம் இன்று தொடக்கம்

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா: தெப்பல் உற்சவம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பாத தரிசனம்

கீழப்பழுவூா் ஆலந்துறையாா் கோயில் தேரோட்டம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

