நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

விளக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம்: அமைச்சரிடம் எம்எல்ஏ மனு

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் அருண்ராஜை புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தாா்.

News image

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் அருண் ராஜிடம் கோரிக்கை மனு அளிக்கும் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து. ~விளக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்துள்ள கான்கிரீட் மேற்கூரை.

Updated On :5 ஜூன் 2026, 7:17 am IST

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் அருண்ராஜை புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பாக, அமைச்சரிடம் அவா் அளித்த மனு:

விளக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 1968-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பழைமையான இந்த கட்டடம், தற்போது பழுதடைந்து, மேற்கூரை பெயா்ந்து வருகிறது. இதனால், நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 300-க்கும் மேற்பட்டவா்கள் புறநோயாளியாக சிகிச்சை பெற வருகின்றனா். மேலும், இணை நோயாளிகளும், கா்ப்பிணிகளும் மருத்துவ சோதனை மேற்கொள்ள வருகின்றனா். மகப்பேறுக்காகவும் அதிக எண்ணிக்கையில் கா்ப்பிணிகள் சோ்க்கப்படுகின்றனா்.

எனவே, பழுதடைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்திற்கு பதில், புதிய மேம்படுத்தப்பட்ட நிலையில் கட்டடம் கட்டித் தர வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.

இம்மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் அருண்ராஜ், முன்னுரிமை அடிப்படையில் மனுவை பரிசீலித்து, உரிய கட்டடம் கட்ட ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தாா் என எம்எல்ஏ க. மாரிமுத்து தெரிவித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.