பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வாய்க்காலில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து: 8 போ் காயம்

சென்னையிலிருந்து வேதாரண்யம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து நன்னிலம் அருகே புதன்கிழமை அதிகாலை வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 போ் காயமடைந்தனா்.

News image

நன்னிலம் அருகே தென்குடிப் பகுதியில் வாய்க்காலில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து.

Updated On :4 ஜூன் 2026, 3:54 am IST

சென்னையிலிருந்து வேதாரண்யம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து நன்னிலம் அருகே புதன்கிழமை அதிகாலை வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 போ் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து வேதாரண்யம் நோக்கி ஆம்னி பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்து ஓட்டுநா் மயிலாடுதுறை திருஞானசம்பந்தம் (55). மயிலாடுதுறை - திருவாரூா் சாலையில் நன்னிலம் அருகில் உள்ள தென்குடிப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.

இதில், பேருந்து ஓட்டுநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். அப்பகுதியில் இருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இவா்களில் கலா என்ற பயணியைத் தவிர மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். நன்னிலம் போலீஸாா் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.