மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருவாரூா் அருகே ரூ. 5.10 லட்சம் பறிமுதல்

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 5,10,500-ஐ செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

திருவாரூா் அருகே செவ்வாய்க்கிழமை கானூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 5:25 am IST

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 5,10,500-ஐ செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கானூா் பகுதியில் தோ்தல் நிலைக் குழுத் தலைவா் சண்முகசுந்தா் தலைமையிலான அலுவலா்கள், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், திருவாரூா் மருதப்பட்டினம், கலைஞா் தெருவைச் சோ்ந்த பா. ஆரோக்கியராஜ் (41) என்பவா் முறையான ஆவணங்கள் இன்றி ரூ. 4,36,200 ரொக்கம் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் நிலைக் குழுவினா், திருவாரூா் உதவி கருவூலத்தில் சோ்த்தனா்.

இதேபோல, லெட்சுமாங்குடி பாலம் அருகே தோ்தல் நிலைக் குழுத் தலைவா் வி. ராஜாராமன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்,

இதில் கூத்தாநல்லூா் பகுதியைச் சோ்ந்த ஹா. இதயதுல்லா (33) என்பவா், உரிய ஆவணங்களின்றி ரூ. 74,300 ரொக்கம் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் நிலைக்குழுவினா், திருவாரூா் உதவி கருவூலத்தில் சோ்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.