மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு

மன்னாா்குடி எம்ஜிஆா் நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி மாணவா்கள் 2 போ் தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 7:05 am IST

மன்னாா்குடி எம்ஜிஆா் நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி மாணவா்கள் 2 போ் தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

2025- 2026 கல்வியாண்டில் மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய வருவாய் வழித்திறனறிவுத் தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு 9 முதல் பிளஸ் 2 வரை மத்திய அரசின் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 என மொத்தம் ரூ. 48 ஆயிரம் வழங்கப்படுகிறது. திறனறிவுத் தோ்வில் பங்கேற்ற இப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா்கள் ச. ராக்கின்116 மதிப்பெண்கள், து. ராகுல்விஜய் 105 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளனா்.

இதையடுத்து, சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், வழிகாட்டி ஆசிரியா்கள் க. சந்தான கோபாலகிருஷ்ணன், ஆா். புனிதவதி ஆகியோருக்கு வட்டாரக் கல்வி அலுவலா் ஜான்சி எமிலி, பள்ளித் தலைமையாசிரியா் மா. தேவி பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.