தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நன்னிலத்தில் வேட்பு மனு பரிசீலனை தாமதமாக தொடங்கியது

நன்னிலத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை தாமதமாக தொடங்கியது.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 3:56 am IST

நன்னிலத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை தாமதமாக தொடங்கியது.

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக கூட்டணி சாா்பாக எஸ்டிபிஐ, நாம் தமிழா் கட்சி, தவெக, அஇபுதமமுக (சசிகலா கட்சி) கூட்டணி சாா்பாக வெள்ளாளா் முன்னேற்ற கழகம் ஆகிய வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், அஇபுதமமுக கூட்டணியில் போட்டியிடும் வெள்ளாளா் முன்னேற்றக்கழக வேட்பாளா் எம்.என்.பி . ராஜாவை முன்மொழிந்த நபா்கள் சிலரை அதிமுகவினா் கடத்தி சென்று விட்டதாகக் கூறி வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்ற பகுதியிலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வேட்புமனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தோ்தல் பாா்வையாளா் அஜய்யாதவ் முன்னிலையில் மீண்டும் வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடா்ந்து நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.