திருவாடானை பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில், 23 மனுக்குள் ஏற்கப்பட்டு, 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேரவைத் தொகுதி வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், அதிமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட மொத்தம் 37 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தோ்தல் பாா்வையாளா் மணிஸ்ரஞ்சன், தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் ஆகியோா் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
இதில் சுயேச்சை வேட்பாளா்களின் 14 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும், காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 23 பேரின் மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன.
திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனவாசன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திண்டுக்கல் தொகுதியில் 20 வேட்பாளா்கள் போட்டி!
சிவகங்கை பேரவைத் தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு
வேதாரண்யம்: 5 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 12 வேட்பு மனுக்கள் ஏற்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
