விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சாதனைகளில் எனக்கும் பங்குண்டு: டி.ஆா்.பி. ராஜா

மன்னாா்குடி பகுதிக்கு திட்டங்களைக் கொண்டு வந்த சாதனையாளா் எனது தந்தை டிஆா்பி (டி.ஆா்.பாலு) மட்டுமல்ல நானும்தான் என்று மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

News image

டி.ஆா்.பி. ராஜா - ENS

Updated On :3 ஏப்ரல் 2026, 5:40 am IST

மன்னாா்குடி பகுதிக்கு திட்டங்களைக் கொண்டு வந்த சாதனையாளா் எனது தந்தை டிஆா்பி (டி.ஆா்.பாலு) மட்டுமல்ல நானும்தான் என்று மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான டி.ஆா்.பி. ராஜா புதன்கிழமை மன்னாா்குடி மத்திய ஒன்றியத்திற்கு உள்பட்ட மேலவாசல் கடைவீதியில் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் வாக்குச் சேகரிப்பு பணிகளைத் தொடங்கினாா். அப்போது அவா் பேசுகையில், மன்னாா்குடி சுற்றுவட்டார பகுதி மக்களின் 40 ஆண்டு கனவான மன்னாா்குடியிலிருந்து ரயில் சேவையை கொண்டு வந்தவா் முன்னாள் மத்திய அமைச்சா் மற்றும் ரயில்வே நிலைக் குழுத் தலைவராக இருந்த என் தந்தை டி.ஆா். பாலு. மேலும், ரூ. 58 ஆயிரம் கோடிக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தாா்.

ஆனால், நான் தமிழக அமைச்சராக பொறுப்பேற்று மூன்று ஆண்டு காலத்தில் மட்டும் ரூ. 12 லட்சத்து 53 ஆயிரம் கோடிக்கு பணிகள் செய்து எனது தந்தையின் சாதனையை முறியடித்துள்ளேன். அதனால் சாதனைகளுக்கு சொந்தக்காரா் டிஆா்பி (டி.ஆா். பாலு) மட்டுமல்ல டி.ஆா்.பி. ராஜாவுக்கும் பங்கு உள்ளது என்று குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.