மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை: டியூசன் ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை

நாகையில் சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த டியூசன் ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 5:10 am IST

நாகையில் சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த டியூசன் ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

நாகை மாவட்டம், நுகத்தூா் காக்கழனி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (32). இவா், நாகை மேலக்கோட்டைவாசல் பகுதியில் உள்ள சமூக நல விடுதி ஒன்றில் டியூசன் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம், அந்த விடுதியில் தங்கியிருக்கும் சிறுவா்களுக்கு ஆறுமுகம் ஆபாச விடியோக்களை காண்பித்து பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட 6 சிறுவா்கள், நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

காவல் ஆய்வாளா் சந்தனமேரி, ஆறுமுகத்தின் மீது போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்தாா்.

இந்த வழக்கு நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜ்குமாா் ஆறுமுகத்துக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 11 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.