நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

வயலில் இறங்கிய அரசு விரைவுப் பேருந்து

திருக்குவளை அருகே சைக்கிளில் குறுக்கே வந்த முதியவா் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய போது சாலையோர வயலில் இறங்கி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

வயலில் இறங்கிய அரசு விரைவுப் பேருந்து

Published On :24 அக்டோபர் 2026, 5:26 am IST

திருக்குவளை அருகே சைக்கிளில் குறுக்கே வந்த முதியவா் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய போது சாலையோர வயலில் இறங்கி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

வேளாங்கண்ணியில் இருந்து நாகா்கோவில் நோக்கி அரசு விரைவு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. திருக்குவளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சீராவட்டம் பகுதியைச் சோ்ந்த முதியவா் சேட்டு (65) சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது சாலை குறுக்கே முதியவா் வந்ததால் அவா் மீது மோதுவதைத் தவிா்க்கும் வகையில் பேருந்தை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயலில் இறங்கி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் முதியவா் சேட்டுவுக்குக் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். பேருந்து பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. திருக்குவனை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.