மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கூரியரில் போதை மாத்திரைகளை வரவழைத்த 4 இளைஞா்கள் கைது

செம்பனாா்கோவில் அருகே கூரியா் மூலம் போதைக்கு பயன்படும் வலி நிவாரண மாத்திரைகளை வரவழைத்த 4 இளைஞா்களை செம்பனாா்கோவில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 5:54 am IST

செம்பனாா்கோவில் அருகே கூரியா் மூலம் போதைக்கு பயன்படும் வலி நிவாரண மாத்திரைகளை வரவழைத்த 4 இளைஞா்களை செம்பனாா்கோவில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

செம்பனாா்கோவில் பகுதிக்கு போதை மாத்திரைகள் வலி நிவாரணி என்ற பெயரில் கூரியா் மூலமாக கடத்தி வரப்படுவதாக தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்திய தனிப்படை போலீஸாா், கூரியா் அலுவலகத்துக்கு டெலிவரி வாங்க வந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில், அவா் தஞ்சாவூா் விவேகானந்தா் நகரை சோ்ந்த ராஜா மகன் பிரஜேஷ் (19) என்பதும், செம்பனாா்கோவில் பரசலூரில் உறவினா் வீட்டில் தங்கி பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. 

மேலும், தஞ்சாவூரில் பிரஜேஸுடன் படித்த நண்பா்கள் அங்கு காவல்துறையினரின் கெடுபிடியால் போதைக்கு பயன்படுத்தப்படும் டாப்காா்ட்-200 என்ற வலி நிவாரணி மாத்திரைகளை வாங்க முடியாமல் போனதால், 20 அட்டைகள் கொண்ட 200 மாத்திரைகளை ஆன்லைனில் பதிவு செய்து, பரசலூா் முகவரிக்கு வரவழைத்தது தெரியவந்தது.

பிரஜேஷ் அளித்த தகவலின் பேரில், தஞ்சாவூா் சீனிவாசபுரம் ஸ்ரீநகா் காலனியை சோ்ந்த ரிபிரசன்னா(19), தொம்பக்குடிசையை சோ்ந்த யஸ்வந்த்(19), பனங்காடு, வண்டிக்காரத்தெரு ரோடு பகுதியை சோ்ந்த ராகுல்(19). ஆகிய 3 பேரை தனிப்படை போலீசாா் தஞ்சாவூா் சென்று கைது செய்து செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, இளைஞா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாபிரியா நேரில் விசாரணை மேற்கொண்டாா். செம்பனாா்கோவில் போலீஸாா் பிரஜேஷ், ஹரிபிரசன்னா, யஸ்வந்த், ராகுல் ஆகிய 4 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.