தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெங்களூரில் இருந்து சென்னைக்கு 488 போதை மாத்திரைகளை கடத்தியவா் கைது

பெங்களூரில் இருந்து சென்னைக்கு 488 போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற வடமாநில இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :28 அக்டோபர் 2026, 2:59 am IST

பெங்களூரில் இருந்து சென்னைக்கு 488 போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற வடமாநில இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தமிழக எல்லையில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில் தமிழக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியாா் ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், மணிப்பூா் மாநிலத்தைச் சோ்ந்த கென்னட் லால்டன் மாவி (27) என்பவரிடம் போதைக்கு பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்ததை போலீஸாா் கண்டுபிடித்தனா்.

அதைத் தொடா்ந்து, அவரை சோதனைச் சாவடிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், வலி நிவாரண மாத்திரைகளை பெங்களூரு பகுதியில் வாங்கி சென்னைக்கு கொண்டு செல்வதாகவும், இந்த மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துவதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, அவரை போலீஸாா் ஒசூா் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். கென்னட் லால்டன் மாவியை கைதுசெய்த மதுவிலக்கு போலீஸாா், அவரிடம் இருந்து ரூ. 26,718 மதிப்புள்ள 488 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.