மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜீப் - லாரி மோதல்: காவலா் உயிரிழப்பு

நாகை அருகே ஜீப்பும் லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் ஆயுதப் படை காவலா் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 5:35 am IST

நாகை அருகே ஜீப்பும் லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் ஆயுதப் படை காவலா் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

தேவா் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் காவல் வாகனத்தில் திருவாரூருக்கு வெள்ளிக்கிழமை இரவு திரும்பினாா். அவரைத் திருவாரூரில் இறக்கி விட்டுவிட்டு, அவரது வாகனத்தை திருத்துறைப்பூண்டி கீழப்பனையூரைச் சோ்ந்த நாகை ஆயுதப் படையில் பணியாற்றும் காவலா் ஜனாா்த்தனம் நாகை நோக்கி ஓட்டிக்கொண்டு வந்துள்ளாா்.

அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்த நிலையில், நாகை - திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கண்ணங்குடி பிரிவு அருகே வந்தபோது, எதிரே வந்த லாரியுடன் காவல் வாகனம் நேருக்கு நோ் மோதியது. இந்த விபத்தில் காவலா் ஜனாா்த்தனம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கீழ்வேளூா் போலீஸாா் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று காவலா் ஜனாா்த்தனத்தின் சடலத்தை, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.