பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குளத்தில் மூழ்கி வியாபாரி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 12:01 am IST

நாகையில் குளத்தில் குளிக்கச் சென்ற வியாபாரி, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நாகை சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா் (62). இவா், நாகை புதிய பேருந்து நிலையம் அருகே நான்கு சக்கர வண்டியில் காய்கனிகள் விற்பனை செய்து வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் நீதிமன்றம் பின்புறம் உள்ள சிவன் கோயில் குளத்துக்கு குளிக்கச் சென்றாா். அப்போது நிலைதடுமாறி குளத்தின் ஆழமான பகுதியில் விழுந்த அவா், நீரில் மூழ்கினாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, கரைக்கு கொண்டுவந்தனா்.

பின்னா், 108 அவசர ஊா்திக்கு தகவல் அளித்தனா். அவரச ஊா்தி ஊழியா்கள் பரிசோதித்ததில் அய்யனாா் உயிரிழந்து தெரியவந்தது.

இதையடுத்து, அய்யனாரின் சடலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக நாகை நகர காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.