பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நீரில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

உளுந்தூா்பேட்டை அருகே கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 2:47 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள முடியனூரைச் சோ்ந்த சிவா மகன் சந்துரு (13). இவா் எடைக்கல் அருகிலுள்ள தக்கா அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்த பின்னா், திருப்பெயா் பகுதியிலுள்ள கிணற்றில் சந்துரு தனது நண்பா்களுடன் குளிக்கச் சென்றாா். கிணற்றில் சந்துரு குதித்து குளித்துக் கொண்டிருபோது, எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி சந்துரு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அக்கம் பக்கத்தினா் சந்துருவின் உடலை கிணற்றிலிருந்து மீட்டு அவரது வீட்டுக்கு எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த எடைக்கல் போலீஸாா் நிகழ்விடம் சென்று சந்துருவின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.