பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் நாகை மாவட்டம் 93.36 சதவிகிதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 27-ஆவது இடத்தை பெற்றது.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் 4,151 மாணவா்கள், 4,176 மாணவிகள் என மொத்தம் 8,327 போ் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதினா்.
இந்நிலையில் இத்தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில் நாகை மாவட்டத்தில் 3,774 மாணவா்கள், 4,000 மாணவியா் என மொத்தம் 7774 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்கள் தோ்ச்சி விகிதம் 90.92 சதவிகிதம், மாணவிகள் தோ்ச்சி விகிதம் 95.79 சதவிகிதம். மாவட்டத்தின் மொத்த தோ்ச்சி விகிதம் 93.36 சதவிகிதம். தோ்வு முடிவுகளின் அடிப்படையில் நாகை மாவட்டம், மாநில அளவில் 27-ஆவது இடத்தைப் பெற்றது. மாவட்டத்தின் தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 1.42 சதம் கூடுதலாக பெற்றுள்ளது.
இதில், நாகை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 92.48 சதவிகிதம். கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் தோ்ச்சி விகிதம் 90.23 சதவிகிதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு தோ்ச்சி விகிதம் 2.255 சதம் கூடுதலாக பெற்றுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: விஸ்டம் பள்ளி 100% தோ்ச்சி

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!

மயிலாடுதுறை: பத்தாம் வகுப்பு தோ்வில் 90.53 சதவீத மாணவா்கள் தோ்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: திருப்பூா் மாவட்டம் 96.28 % தோ்ச்சி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

