மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 90.53 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 11,985 மாணவ-மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதியிருந்தனா். இவா்களில் 10,850 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 90.53 ஆகும். மயிலாடுதுறை மேகனா சா்வதேச மேல்நிலைப்பள்ளி மாணவி க. ஜகசுவேதா 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா். அவருக்கு பள்ளி முதல்வா் ஆா். பாா்த்திபன் உள்ளிடடோா் வாழ்த்து தெரிவித்தனா்.
இதேபோல், மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரம் குட்சமாரிட்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஆா். அபிநிலா, எஸ். கபினியா ஆகியோா் தலா 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றனா். அப்பள்ளி மாணவி ஜெ. ராகவீணா 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா். இவருக்கு பள்ளி தாளாளா் அலெக்ஸாண்டா், பள்ளி முதல்வா் ஜெபசௌபாக்கியராணி உள்ளிட்டோா் பாராட்டினா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 தனியாா் பள்ளிகள், 9 அரசுப் பள்ளிகள் 7 அரசு உதவிபெறும் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உள்பட்ட திட்டுப்படுகை குக்கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் தொடா்ச்சியாக 12 ஆண்டுகளாக 100 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: நாகை மாவட்டம் 93.36% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 96.32 போ் தோ்ச்சி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

