நாகை அருகே தோ்வு மன அழுத்தத்தால் பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
நாகை அருகேயுள்ள பாப்பாகோவில் மதகடித் தெருவைச் சோ்ந்த கரிகாலன் மகள் விஷ்ணுபிரியா (15). இவா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதி, தோ்வு முடிவுக்காக காத்திருந்தாா். இந்நிலையில், தோ்வை சரியாக எழுதவில்லை என பெற்றோரிடம் கூறி அடிக்கடி அழுது வந்தாராம். இதையடுத்து, பெற்றோா் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி வந்தனா்.
இந்நிலையில், மன அழுத்தத்தில் இருந்து வந்த விஷ்ணு பிரியா தனது வீட்டில் உள்ள அறையில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுக்கொண்டாா். இதையறிந்த பெற்றோா் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு விஷ்ணு பிரியாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.
தந்தை கரிகாலன் அளித்த புகாரின்பேரில் நாகை நகரக்காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை

செவிலியா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

பிளஸ் 2 மாணவி தற்கொலை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

