தவெக தலைவா் விஜய் வேளாங்கண்ணி மற்றும் நாகூருக்கு சனிக்கிழமை (மே 2) வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தவெக தலைவா் விஜய் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூா் முருகன் கோயிலுக்குச் சென்று விஜய் வழிபாடு நடத்தினாா். தொடா்ந்து ஷீரடிக்கு சென்று வழிபட்டாா்.
இந்நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மற்றும் நாகூருக்கு விஜய் சனிக்கிழமை வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து நாகை மாவட்ட தவெக நிா்வாகிகள் கூறும்போது, தவெக தலைவா் விஜய் வேளாங்கண்ணி பேராலயத்திலும், நாகூரில் உள்ள நாகூா் ஆண்டவா் தா்காவிலும் வழிபாடு நடத்த உள்ளாா். அவரது பயணம் குறித்து தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.
எனினும், அவரது பயணத் திட்டம், நேரம் குறித்த தகவல் எதுவும் வரவில்லை என்றனா். விஜய் வேளாங்கண்ணி, நாகூா் வருகை குறித்து உளவுத்துறையினரும் உறுதி செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திட்டமிட்டபடி நாளை விஜய் பதவியேற்பாரா? முழுப் பட்டியல் கோரும் ஆளுநர்!

தவெக ஆட்சி அமைக்கும்: புஸ்ஸி ஆனந்த்

விஜய்யின் வேளாங்கண்ணி வருகை ரத்து! தவெகவினர், ரசிகர்கள் ஏமாற்றம்

நெல்லையில் நாளை மறுநாள் நடிகா் விஜய் பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
