தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

திட்டமிட்டபடி நாளை விஜய் பதவியேற்பாரா? முழுப் பட்டியல் கோரும் ஆளுநர்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டபடி நாளை பதவியேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

News image

ஆளுநருடன் விஜய் - பிடிஐ

Updated On :6 மே 2026, 5:19 pm IST

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டபடி நாளை (மே 7) பதவியேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து இன்று (மே 6) உரிமை கோரிய நிலையில், ஆதரவு எம்.எல்.ஏக்களின் முழுப் பட்டியல் கொடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தரப்பில் கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், விஜய் திட்டமிட்டபடி நாளை முதல்வராகப் பதவியேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் மற்ற கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளதால், தவெகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 112 ஆக உயந்துள்ளது.

எனினும், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் 6 உறுப்பினர்கள் தேவைப்படுகிறது.

இந்நிலையில், ஆதரவு உறுப்பினர்களின் முழுப் பட்டியலை கொடுக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தரப்பில் தவெகவிடம் கோரப்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி விஜய் நாளை பதவியேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் தவெக தொடர்ந்து அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Will Vijay Assume Office Tomorrow as Planned? Governor Demands Full List

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.