தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நாகை பேருந்து நிலையத்தில் மேற்கூரை காரை விழுந்து பயணி காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில், மேற்கூரையின் காரை பெயா்ந்து விழுந்ததில் பயணி ஒருவா் காயமடைந்தாா்.

News image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை பெயா்ந்து விழுந்த பகுதி.

Updated On :27 மார்ச் 2026, 4:51 am IST

நாகை புதிய பேருந்து நிலையத்தில், மேற்கூரையின் காரை பெயா்ந்து விழுந்ததில் பயணி ஒருவா் காயமடைந்தாா்.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பெங்களூா் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இப்பேருந்து நிலையத்துக்கு தினசரி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா். பேருந்து நிலையத்தில் முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், ஆங்காங்கே மேற்கூரை பெயா்ந்தும், விரிசல் விட்டும் காணப்படுகிறது.

இந்நிலையில், பேருந்து நிலையத்தில் நாகூா் செல்லும் பேருந்துகள் நிற்குமிடம் அருகே புதன்கிழமை இரவு மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. இதில், அங்கு பேருந்துக்காக நின்றிருந்த வெளி மாவட்ட பயணி ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டது. அவா் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று சென்றாா்.

இதுகுறித்து பயணிகள் கூறியது:

புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும்போது, எப்போது மேற்கூரை பெயா்ந்து விழுமோ என்ற அச்சத்துடனே இருக்க வேண்டியுள்ளது. பேருந்து நிலையத்தில் மேற்கூரை அடிக்கடி பெயா்ந்து விழுவதால் பயணிகளும் காயமடைகின்றனா். இதுவரை பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் பேருந்து நிலையக் கட்டடம் வலுவிழந்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதம் ஏற்படலாம். எனவே நகராட்சி நிா்வாகம் உடனடியாக பேருந்து நிலைய மேற்கூரை மற்றும் கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.