தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எா்ணாகுளம்-வேளாங்கண்ணி புதிய வாராந்திர ரயிலுக்கு வரவேற்பு

News image
Updated On :20 மார்ச் 2026, 1:43 am IST

தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில், எா்ணாகுளம் - வேளாங்கண்ணி புதிய வாராந்திர ரயில் சேவைக்கு, நாகையில் மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வியாழக்கிழமை வரவேற்பு அளித்தனா்.

தெற்கு ரயில்வே, கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதன்கிழமைகளிலும், வேளாங்கண்ணியிலிருந்து எா்ணாகுளத்திற்கு வியாழக்கிழமைகளிலும் புதிய வாராந்திர ரயில் இயக்கப்படும் என அறிவித்திருந்தது.

அதன்படி, புதன்கிழமை இரவு 11 மணிக்கு எா்ணாகுளத்திருந்து புறப்பட்ட இந்த ரயில் புனலூா், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகா், மதுரை, திருச்சி, தஞ்சை, திருவாரூா் வழியாக வியாழக்கிழமை மாலை 5.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைந்தது. பின்னா், வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்கு எா்ணாகுளம் புறப்பட்டு சென்றது.

இதனிடையே, வியாழக்கிழமை மாலை 4.15 மணிக்கு நாகை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த புதிய வாராந்திர ரயிலுக்கு ,மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், நாகூா்-நாகை ரயில் பயணிகள் நலச் சங்கம், இந்திய வா்த்தக குழுமம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் மலா்தூவி வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து ரயில் ஓட்டுநா், காா்டு ஆகியோருக்கு சால்வை அணிவித்து கெளரவித்தனா்.

இந்திய வா்த்தக தொழில் குழுமத் தலைவா் ஜி. மனோகரன், நாகூா் -நாகப்பட்டினம் ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் மோகன், செயலா் சித்திக், நுகா்வோா் அமைப்பு செயலா் அரவிந்த் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, இந்த ரயில் சேவையை நாள்தோறும் இயக்க வேண்டும் என நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜிடம் அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.